இந்திய உதவித் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கும் போது கடந்த காலங்களைப் போன்று மலையக மக்களுக்கு பாராபட்சம் காட்டப்படக் கூடாது என்று கண்டி மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் வேலு குமார் தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
மலையக அரசியல் வாதிகள் மத்தியில் மேற்படி விடயம் தொடர்பாக கூட்டு வேலைத்திட்டம் ஒன்று தேவை? இல்லாத விடத்து கடந்த காலங்கள் போன்று அவை சிதறடிக்கப்படலாம். தற்பேதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு உதவி செய்ய முறையான பொருளாதார வேலைத்திட்டம் ஒன்று தேவை.
சரியான பொருளாதாரத் திட்டம் இல்லை என்றால் அத்தியாவசியப் பண்டங்களுக்கான வரிசைகள் தீரப்போவதில்லை.
தமிழ் நாடு அரசு வழங்கிய 2 பில்லியன் உதவிக்கான பொருளாதார வேலைத்திட்டம் என்ன?இந்திய உதவி முறையாகப் பகிரப்பட வேண்டும். கொவிட் கால உதவி போல் முறையற்ற வகையில் பகிரப்படக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்.
உலக வங்கி இலங்கைக்கு நிதி உதவி செய்ய ஏன் மறுக்கிறது, அப்படியாயின் இலங்கையில் முறையான பொருளாதார திட்டம் மற்றும் கொள்கை ஒன்று இல்லயைா? எனக் கேள்வி எழுப்பினார்.










