தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை என்.பி.பி. அரசு மறக்கவில்லை!

” தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் மறக்கவில்லை. அவற்றை நிச்சயம் நிறைவேற்றுவோம். காணி விடுவிப்பு நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.” – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (22.08.2025) உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,

” யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துவிட்டன. போரால் ஏற்பட்ட வடுக்கள் இன்னும் ஆறவில்லை. அதனால்தான் இப்படியான பிரேரணைகள் வருகின்றன. அத்துடன், வடக்கில் புலம்பெயர்வுகளைத் தடுக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் யாழ்ப்பாணம் மக்கள் இல்லாத பகுதியாக மாறக்கூடும்.

வடக்கில் மிக வேமாக அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மூன்று பிரதான தொழில் பேட்டைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. அதன்பின்னர் சிறந்த தொழில் பிரதேசமாக வடக்கு மாறும். அதன்பின்னர் எமது பகுதியை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை குறையும். எமது மக்கள் மத்தியிலும் நம்பிக்கை ஏற்படும். தமிழ் மக்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து வருகின்ற புலம்பெயர் தமிழர்கள் இன்று சுதந்திரமாக வரக்கூடிய சூழ்நிலை உள்ளது. எவ்வித பாதுகாப்பு கெடுபிடிகளும் இல்லை. இதனால் இங்கேயே இருந்துவிடலாம் என எண்ணுகின்றனர். முதலீட்டு வாய்ப்புகள் பற்றி ஆராய்கின்றனர்.

எமது ஆட்சி வந்து 10 மாதங்கள் கடந்துவிட்டன. தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் மறக்கவில்லை. அவற்றை நடைமுறைப்படுத்துவோம். காணிகள் விடுவிக்கப்படும் என்பது பிரதான உறுதிமொழி. தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் படிப்படியாக கூடிய சீக்கிரம் விடுவிக்கப்படும்.

தையிட்டி விகாரைப் பிரச்சினையும் நிச்சயம் சுமூகமான முறையில் தீர்க்கப்படும். இன்னும் ஓரிரு மாதங்களில் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள் ஆகிய பிரச்சினை பற்றியும் நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles