தமிழினம் விடுதலை பெற அனைத்து தரப்பினரும் ஒன்றாகப் பயணிக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்தினார்.
யாழ்ப்பாணத்தில் தனது இல்லத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“பிறந்துள்ள புத்தாண்டில் என்னுடைய பிரார்த்தனை என்னவெனில் தமிழினம் ஓர் இனமாக – விடுதலையை நோக்கி முழுமையாக – ஒன்றாகப் பயணிக்க வேண்டும்.
அதன் மூலம் எங்களுடைய இனம் விடுதலை பெற வேண்டும். சுயமாக சுயாட்சி பெற வேண்டும். தன்னாட்சி பெற வேண்டும். தமிழாட்சி பெற வேண்டும்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.
