தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்த புதிய கூட்டணி திட்டம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கு ‘புதிய அரசியல் கூட்டணி’ தீர்மானித்துள்ளது.

அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா மற்றும் சுதந்திரக்கட்சியின் நிமல் சிறிபாலடி சில்வா அணியினர் இணைந்து புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்கவுள்ளனர். இதற்கான பேச்சுகள் வெற்றிகரமாக இடம்பெற்றுவருகின்றன.

‘புதிய அரசியல் கூட்டணி’ என்ற பெயரிலேயே கூட்டணிக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் பல தரப்புகளே தற்போது இக்கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

எனவே, அடுத்து வரும் நாட்களில் தமிழரசுக் கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் என்பவற்றுடன் கூட்டணி பிரமுகர்கள் பேச்சு நடத்தவுள்ளனர். b

அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இக்கூட்டணி அமைய வேண்டும் என நிமல் சிறிபாலடி சில்வா கருத்து வெளியிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles