தமிழ்க் கூட்டமைப்பு தேசத்துரோக அமைப்பு – சரத் வீரசேகர சீற்றம்

” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தேசத்துரோக அமைப்பாகும். எனவே, அக்கட்சியின் முடிவுகள் தொடர்பில் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை” – என்று விமர்சித்துள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கவுள்ளதே என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சரத் வீரசேகர இவ்வாறு விமர்சித்தார்.

” நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயங்கள் எல்லாவற்றையும் எதிர்க்கும் தேசத்துரோக அமைப்பே கூட்டமைப்பு. புலிகள் அமைப்பின் அரசியல் கிளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. புலிகளுக்கு இந்நாட்டை பிரிக்க வேண்டும். பிரபாகரன் முன்னிலையிலேயே கூட்டமைப்பினர் பதவியேற்றனர். அவர்கள் கூறுவது தொடர்பில் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.” எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles