தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே!

* நீதிமன்ற வழக்குகளை மீளப்பெறு
* பொதுச் சபையை உடனடியாகக் கூட்டு
* யாப்பின்படி தலைவர் உட்பட யாரையும் வெளியேற்றும் அதிகாரம் மத்திய குழுவுக்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள்
* 2019 இல் பொதுச் சபையால் நியமிக்கப்பட்ட தேர்தல் நியமனக் குழுவை இயங்கவிடு

தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே!

– தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்ட வாயிலில் காட்சியளித்த பதாதை

“மத்திய குழுவின் பலவீனமான தீர்மானங்களால் தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே!” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் கூடிய பதாதை ஒன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறும் மண்டபத்துக்கு முன்னால் காட்சியப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பதாதைகுத்த தமிழரசுக் கட்சியின் பொதுச் சபை உறுப்பினர்கள், மற்றும் தொண்டர்கள் உரிமை கோரியுள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே இந்தப் பதாதை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதன்போது மத்திய குழுக் கூட்டத்துக்கு வருகை தந்தவர்கள் அந்தப் பதாதையைப் பார்வையிட்ட பின்னர் கூட்ட மண்டபத்துக்குள் சென்றிருந்தனர்.

குறித்த பதாகையில், “நீதிமன்ற வழக்குகளை மீளப்பெறு, பொதுச் சபையை உடனடியாகக் கூட்டு, யாப்பின்படி தலைவர் உட்பட யாரையும் வெளியேற்றும் அதிகாரம் மத்திய குழுவுக்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள், 2019 இல் பொதுச் சபையால் நியமிக்கப்பட்ட தேர்தல் நியமனக் குழுவை இயங்கவிடு, மத்திய குழுவின் பலவீனமான தீர்மானங்களால் தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே!” – போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles