தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாம் மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை

தமிழகத்தில் உளள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் மாணவி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 591 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார்.

மதுரையில் ஆனையூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் நிலையில், இங்குள்ள 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மாவட்டம் முழுவதுமுள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

2022-23 கல்வியாண்டில் 8 மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், உதயராஜ் என்பவரின் மகள் திரித்துஷா கூடல்நகர் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் ஆர்ட்ஸ் பிரிவில் பயின்று 591 மதிப்பெண் எடுத்துள்ளார். தமிழில் – 97, ஆங்கிலத்தில் – 96 எக்கனாமிக்ஸ் – 99 , வணிகவியல் 99, கணக்குப்பதிவியல் – 100, கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் – 100 என மொத்தம் 591 மதிப்பெண் பெற்றுள்ளார்.

“பத்தாம் வகுப்பு முடித்தவுடன் அறிவியல் பிரிவை தேர்ந்தெடுத்து மருத்துவராக வேண்டும் என்று தான் எனக்கு ஆசை. ஆனால், அகதிகள் முகாமில் உள்ளதால் எங்களால் படிக்க முடியாது. அதனால் வணிகவியல் படித்துள்ளேன். ஆடிட்டராக வேண்டும் என்பது எனது விருப்பம்” என திரித்துஷா தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles