தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்துக்கு புதிய நிர்வாகக்குழு நியமனம்!

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய தலைவராக எஸ்.ஸ்ரீகஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் புதிய செயலாளாக கே.ஜெயந்திரன் தெரிவாகியுள்ளார்.

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாக தெரிவும் இன்று காலை 10.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

இதன்போது கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் நிகழ்கால செயற்பாடுகள் பற்றியும் ஆராயப்பட்டன. பின்னர் புதிய நிர்வாக குழு தெரிவு செய்யப்பட்டது.

அதன்படி புதிய தலைவராக எஸ்.ஸ்ரீகஜன் (வீரகேசரி) தெரிவு செய்யப்பட்டதுடன், செயலாளராக கே.ஜெயந்திரன் (தினக்குரல்) ஆகியோரும் உபதலைவர்களாக லியோ நிரோஷ தர்ஷனும் தர்மினி பத்மநாதனும் உப செயலாளராக சு.சிவசண்முகநாதனும் தெரிவு செய்யப்பட்டனர்.

பொருளாளராக ப.விக்னேஸ்வரன் (சூரியன் எப்.எம்.), உப பொருளாளராக எஸ் வாஸ் கூஞ்ஞை ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர். நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஆர். சிவராஜா , எஸ். அனந்த பால கிட்ணர் , என். ஜெயகாந்தன் , வீ.பிரியதர்ஷன் , ஆர். சேதுராமன் , கி. லக்ஸ்மன் சிசில் , பிரியங்கா சந்திரசேகரம் , கே.ஹரேந்திரன் , கே. பிரசன்னகுமார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

மேலும் வடமாகாண இணைப்பாளராக கணபதி சர்வானந்தா, கிழக்கு மாகாண இணைப்பாளராக எஸ். சரவணன் மற்றும் மலையக இணைப்பாளராக சிவலிங்கம் சிவகுமாரன் ஆகியோருடன் ஒன்றியத்தின் மேலதிக இணைப்பாளராக தர்மினி பத்மநாதனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles