தமிழ் எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று பேச்சு – விக்கி புறக்கணிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது என்று அழைப்புக் கடிதத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது. நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்க மாட்டேன் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“ 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்ற மிக முக்கியமான விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் ஏற்கனவே வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அதனை அமுல்படுத்தாமல் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடுவதன் மூலம் எந்தவொரு பயனுள்ள நோக்கமும் நிறைவேறாது என்பதே எனது கருத்தாகும்.

ஆகவே, இன்று நடைபெறவுள்ள ஜனாதிபதியால் அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நான் கலந்துகொள் ளப்போவதில்லை.”-என்று விக்னேஸ் வரன் எம்.பி. அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி செயல கத்துக்கு அவர் கடிதம் ஒன்றையும் அவர் அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“ 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நான் 24.07.2023 மற்றும் 15.08.2023 ஆகிய திகதிகளில் ஜனாதிபதியை கலாநிதி கே.விக்னேஸ்வரனுடன் சந்தித்தேன்.

ஜனாதிபதியுடனான இரண்டாவது சந்திப்பின் போது, கீழ்க்கண்டவாறு ஐந்து நிபுணர்களை உள்ளடக்கிய அதிகாரப்பகிர்வுக்கான குழுவொன்றை நியமிப்பது பற்றி அவர் சாதகமாகப் பேசினார்.

அரசமைப்பின் 154 டி பிரிவின் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்தி ஜனாதி பதியால் குழுவை நியமிக்க முடியும் என்பதை நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம். சட்டப்பிரிவு 154 எல் இன் கீழ் பிரகடனம், சட்டங்கள் ஒப்புதலுக்குத் தயாராக இருக்கும் போது மட்டுமே தேவைப்படும். செப்டெம்பர் 1, 2023 இற்குள் குழுசெயற்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். இது நடக்கவில்லை. இப்போது டிசம்பர் 2023. 13 ஆவது திருத்தம் முழு வதுமாக அமுல்படுத்தப்படும் என்று எதிர்பார்த்தவர்கள் இப்போதைக்கு ஏமாற்றம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

13 ஆவது திருத்தத்தின் கீழ் குறைந்தபட்சம் 100 வரைவு சட்டங்களைத் தயாரிப்பதே குழுவின் ஆரம்பப் பணியாகும்.இந்தப் பணி சுமார் 6 மாதங்கள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசமைப்பின் 154 எல் பிரிவின் கீழ் ஒரு பிரகடனம்செய்யப்பட்ட பின்னர், நிச்சயமாக அந்த வரைவு சட்டங்களின் ஒப்புதல் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மத்திய அரசால் தவறாகக் கையகப்படுத்தப்பட்ட மாகாண சபைகளின்விடயங்களை மீளப் பெறுவதற்குப் பின்பற்ற வேண்டிய நிர்வாக நடைமுறைகள்குறித்தும் ஜனாதிபதிக்கு ஆலோசனைவழங்குவதற்கும் இக்குழு வழிவகைகளையும் வழிமுறைகளையும் வகுத்துரைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மாவட்ட நிர்வாகங்களை மாகாணங்களுக்குமாற்றுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் குழுவின் ஆலோசனை ஜனாதிபதிக்கு அவசியமானது. ஜனாதிபதி உறுதியளித்தபடி இவை எதுவும் நடைபெறவில்லை.

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்ற மிக முக்கியமான விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அமுல்படுத்தாமல் நல்லிணக்கம் மற்றும்
அபிவிருத்தி குறித்து கலந்துரையாடுவதன் மூலம் எந்தவொரு பயனுள்ள நோக்கமும் நிறைவேறாது என்பதே எனது கருத்தாகும்.

ஆகவே, 2023 டிசம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதியால் அழைக் கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நான் கலந்துகொள்ளவில்லை என்பதில் நான் வருந்துகின்றேன்.” – என்றுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles