வத்தளை ஓ.எஸ்.சியிடம் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!
வத்தளை ஹெந்தலை பிரதேசத்தில் ராமலிங்கம் தங்கராஜா, விமலா சுப்பிரமணியம் என்ற தமிழ் குடும்பத்தை துன்புறுத்தி வீட்டை கைப்பற்ற முனைந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக உரிய தீர்வை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கையெடுக்குமாறு வத்தளை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவர் செந்தில் தொண்டமான் ஆலோசனை வழங்கியுள்ளதுடன், இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படும்வரை அப்பகுதியில் எவ்வித அசம்பாவிதங்களும் முறுகல்களும் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் பணிப்புரை வழங்கியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அறிந்தவுடனே உடனடியாக வத்தளை ஓ.எஸ்.சிக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ள செந்தில் தொண்டமான், இந்த விடயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வதன் ஊடாக இருதரப்பினரும் உரிய தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதலளித்துள்ள வத்தளை ஓ.எஸ்.சி., 81ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதென்பதால் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதும் வழக்குத் தாக்கல் செய்வதாகவும் செந்தில் தொண்டமானிடம் கூறியுள்ளார்.