தமிழ் நாட்டில் இருந்து இலங்கைக்கு இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள்

தமிழ்நாடு அரசு இலங்கைக்கு அனுப்பும் இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் நேற்று தூத்துக்குடி துறைமுகத்திற்கு எடுத்து வரப்பட்டது.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்களிற்காக தமிழ்நாடு அரசு ஏற்கனவே 40 ஆயிரம் தொன் நிவாரணப் பொருட்கள் கொழும்பு வழியாக அனுப்பிய நிலைமையில் இரண்டாம் கட்டம் காங்கேசன்துறை ஊடாக அனுப்பி வைக்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதன் பயனாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இவ்வாறு கொண்டு வரப்பட்ட நிவாரணப்  பொருட்கள் அனுப்பும் நடவடிக்கையை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.செந்தில்ராஜ் நேற்று நேரில் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டார்.

இப் பொருட்கள் அடுத்த சில நாட்களில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு எடுத்து வரப்படவுள்ளது.

Related Articles

Latest Articles