பிரபல தொழில் அதிபரான நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கும் முடிவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எடுக்கவில்லை – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பத்தையே தம்மிக்க பெரேரா வெளியிட்டுள்ளார். அது அவருக்குள்ள அரசியல் சுதந்திரம். எனினும், ஜனாதிபதி வேட்பாளரை மொட்டு கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை. உரிய நேரத்திலேயே வேட்பாளர் அறிவிக்கப்படுவார், அவர் வெற்றி வேட்பாளராகவே இருப்பார்.” – எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.
