2016ம் ஆண்டு வெளியான படம் தர்மதுரை.விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.யுவன் இசை அமைத்திருந்தார், சுகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருந்தார், சீனு ராமசாமி இயக்கியிருந்தார்.தர்மதுரை இரண்டாம் பாகம் எடுக்க சீனு ராமசாமி முயற்சித்து வந்தார்.ஆனால் விஜய் சேதுபதி தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை.
இதனால் தற்போது ஹீரோவாக நடித்து வரும் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க சீனு ராமசாமி முயற்சிக்கிறார் என்ற தகவல்கள் வெளியானது.இதனை சீனு ராமசாமி மறுத்திருந்தார்.
இந்த நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த கூட்டணி இப்போதைக்கு விஜய்சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமி இயக்கி உள்ள மாமனிதன் படத்தின் விநியோகம் தொடர்பாக. மாமனிதன் படத்தின் தமிழ்நாடு மற்றும் கேரள விநியோக உரிமத்தை ஆர்.கே.சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனம் வாங்கி உள்ளது.
இதனை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார்.இந்த கூட்டணி இப்படியே தொடர்ந்தால் தர்மதுரை இரண்டாம் பாகம் உருவாகும் என்று கூறப்படுகிறது.