தலவாக்கலையில் தீ விபத்து – 5 லயன் குடியிருப்புகள் தீக்கிரை – மேலும் 7 வீடுகள் பகுதியளவு சேதம்!

தலவாக்கலை, மிடில்டன் தோட்டப்பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 5 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. மேலும் 7 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

தீ விபத்தால் வீடுகளை இழந்தவர்கள் அருகில் உள்ள பாடசாலையிலும், உறவினர்களின் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளன.

12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பொன்றிலேயே இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தம்மை விரைவில் பாதுகாப்பான இடத்தில் குடியேற்றுமாறும், சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதால் இழப்பீடு வழங்குமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கௌசல்யா – தலவாக்கலை

Related Articles

Latest Articles