தலவாக்கலை பி.கேதீஸ்
தலவாக்கலை, கிறேட்வெஸ்டன் வனப்பகுதியில் இருந்து, பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தலவாக்கலை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய தலவாக்கலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று கிறேட்வெஸ்டன் பகுதிக்கு இன்று மாலை சென்றனர்.
இதன்போது 25 வயது முதல் 30 வயது மதிக்கதக்க பெண்ணொருவர், உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கிறேட்வெஸ்டன் மலை உச்சிக்கு ஏறுவதற்காக வருகின்றனர். அவ்வாறு வந்தவர்களில் ஒருவராக கூட இவர் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.










