தலவாக்கலை நகரில் “சாலையோரம் உணவகம்”

அமரர். செளமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தினூடாக சௌபாக்கிய தெக்ம வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று (30) தலவாக்கலை நகரில்  “சாலையோரம் உணவகம்” ஒன்றிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வேலைத்திட்டத்திற்கான முதற்கட்டமாக 6 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவர் லெட்சுமன் பாரதிதாசன் தெரிவித்தார்.

அரசாங்கம் 100 அலங்கார நகர நிர்மாணத்திற்கு அமைய தலவாக்கலை நகரமும் இத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமையின் காரணமாகவே திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர சபை தவிசாளர் தெரிவித்தார்.

அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை விந்துலை நகரசபை கட்டிடத்திற்கு முன்பாக இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இங்கு முற்றிலும் சத்துள்ள ஆரோக்கியமான பாரம்பரிய உணவு வகைகளை உடனுக்குடன் தயாரித்து வழங்கக் கூடியவாறான வகையில் சாலையோரம் உணவகம் அமைக்கப்படவுள்ளது.

தலவாக்கலை – லிந்துலை நகரசபை தலைவர் லெட்சுமன் பாரதிதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள், நகர சபை உறுப்பினர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி செயலாளர் அர்ஜீன் ஜெயராஜ், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது இந்த அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுப்பதற்காக நிதி வழங்கிய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நகரசபை தலைவர் பாரதிதாசன் நன்றி கூறியதோடு இத் திட்டம் தொடர்பாகவும் அபிவிருத்திப்பணிகள் தொடர்பாக கருத்து வழங்கினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles