திகாவை மெச்சும் திலகர் : அரசியலும் நன்றி உணர்வும்

தன்னை அரசியலுக்கு அறிமுகப்படுத்திய தேசிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரத்தை, அந்த முன்னணியின் பொதுச் செயலாளர் பதவி வகித்துவந்த திலகராஜா மெச்சியுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளராக பதவி வகித்த மயில்வாகனம் திலகராஜிற்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாமல் புதிய ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதுடன், திலகராஜாவின் பெயர் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டது.

இதனையடுத்து கட்சியுடனான உறவுகளை முறித்துக் கொண்ட திலகராஜ் சுயாதீனமாக செயற்பட்டு வருகிறார். இந்த நிலையில், தேசிய தொழிலாளர் முன்னணி அனுப்பிவைத்துள்ள கடித உரையொன்றையும் அவர் நையாண்டி செய்து பதிவிட்டு வருகிறார்.

தேசிய தொழிலாளர் முன்னணியில் இருந்து பதவி நீக்கப்பட்டுள்ள நிலையில் திகாம்பர் – திலகர் பனிப் போர் உக்கரமடைந்துள்ளது.

இந்த நிலையில் தான், தொழிலாளர் தேசிய முன்னணி என்ற கட்சியே முடிவுறுத்தப்பட்டதன் பின்னர் அதில் பொதுச் செயலாளர் பதவி வகித்த என்னை நீக்கியுள்ளதாக ஒரு செய்தியையும் இடைநிறுத்தி உள்ளதாக ஒரு செய்தியையும் “அரச பணி” யாக ஒன்று கூடி அறிவித்திருப்பவர்களின் அறிவை மெச்சுகிறேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜா மேலும் தெரிவித்துள்ளதாவது,

தொழிலாளர் தேசிய முன்னணியில் இருந்து அதன் பொதுச் செயலாளராக நீக்கப்பட்டுள்ளதாகவும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இரண்டு விதமான செய்திகள் வந்துள்ள நிலையில் அது குறித்து ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தேசிய முன்னணியின் விசேட மத்திய குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக கடந்தவாரம் பலரும் என்னைத் தொலைபேசி மூலம் அழைத்துக் கேட்டு இருந்தனர். அதுபற்றி ‘தெரியாது’ என்றே அவர்களுக்கு நான் பதில் அளித்தேன். ஆனால் எனக்கே அப்படி ஒரு அழைப்புக் கடிதம் வந்த போதுதான் அதில் செயலாளர் எனக்குறிப்பிட்டு எனது இரண்டு தொலைபேசி இலக்கங்களுமே குறிப்பிடப்பட்டு இருந்ததை அவதானித்தேன். அதனால்தான் பலரும் எனக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து விசாரித்து இருக்கிறார்கள்.

தொழிலாளர் தேசிய முன்னணி எனும் கடிதத் தலைப்பில், பழநி திகாம்பரம் என்பவரால் கையொப்பமிடப்பட்ட திகதியிடப்படாத அந்தக் கடிதம் ஒன்று எனது பெயருக்கு, எனது பிரத்தியேக முகவரிக்கு “அரச பணி” ( On state service ) என்பதாக “பதிவுத்தபாலில்” அனுப்பபட்டிருந்தது. இப்போதுதான் என்னைப் பதவி நீக்கும் அல்லது இடைநிறுத்தும் செய்யும் தீர்மானத்தை ஓர் “அரச பணியாகவும்” செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
அரசியல் கட்சி சம்பந்தப்பட்ட கடிதத்தை “அரசபணி” பதவி முத்திரைகளையும், கடித உறைகளையும் பாவித்து அனுப்பியிருக்கும் அவரினதும் அவர்தம் ஆலோசகர்களினதும் அறிவை மெச்சுகிறேன்.

கடித்த்தின் உள்ளடக்கம் ஓர் “அரச பணி” சார்ந்த விடயமல்ல என்பதையும் கூடவே கடிதத்தின் உள்ளடக்கமும் கீழே குறிப்பிட்டு இருக்கும் பதவி முத்திரையும் அரச பணிக்குரியதல்ல என்பதையும் குறிப்பிட்டு முறையற்ற அழைப்பினைச் சுட்டிக்காட்டி அந்தக் கூட்டத்துக்கு நான் சமூமகமளிக்கும் அவசியமில்லை என எழுத்து மூலம் அவர்களுக்கு அறிவித்து விட்டேன்.

மேலும் இத்தகைய ஒரு கூட்டத்தினை தொழிலாளர் தேசிய சங்க தலைமைக் காரியாலயத்தில் அல்லாது அவர்களது ஆஸ்த்தான விருந்தகத்தில் கூட்டியது மகிழ்ச்சியே. ஏனெனில் தொழிலாளர் விடுதலை முன்னணியில் இருந்து தூக்கிவீசப்பட்டவுடன் உதவி கேட்டு என் வீட்டு வாசலில் நின்றவர்களை நான் அழைத்துச் சென்று தலைமை ஆசனத்தில் அமரச் செய்த இடம் தொழிலாளர் தேசிய சங்க தலைமையகம்.இப்போது தனது சுயநலன்களுக்காக அதனைத் தாரைவார்த்துவிட்டு நிற்பவர்கள், என்னை இடை நிறுத்தும் அல்லது நீக்கும் தீர்மானத்தை அங்கே கூடி எடுக்காதது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே. அவர்களது மனசாட்சி அதற்கு இடம் கொடுத்திருக்காது என்பது எனக்குத் தெரியும்.

இவ்வாறான சட்டமுரணான, ஒழுங்கு முரணான விடயங்களைச் சுட்டிக்காட்டி நான் ஒன்றும் அவர்களிடம் நான் விளக்கம் கேட்கப் போவதும் இல்லை. ஏனெனில் தொழிலாளர் தேசிய முன்னணி பொறுப்புகளில் இருந்து 2021-02-10 ம் திகதி முடிவுறுத்தப்படுவதற்கான தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் நடவடிக்கைகளுக்கான அவரது 2021-01-26 திகதியிடப்பட்ட கடிதத்துக்கு உடன்பாட்டை தெரிவித்து ஏற்கனவே தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்துக்கு எனது நிலைப்பாட்டை எழுத்து மூலம் அறிவித்து விட்டேன்.

இப்போது இல்லாத கட்சியியை “அரச பணி” யாக கூட்டி அறிவித்தல் விடுத்துக் கொண்டிருக்கும் “அறிவாளிகளின்” தீர்மானத்தில் எனக்கு எந்த அக்கறையுமில்லை. இத்தகைய அறிவிப்புகளால் அவர்களுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சாதாரண நிறுவனமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒருவருக்கு வணிகம், அரசியல் என அறிமுகப்படுத்தி, நாடாளுமன்றம் வரை அழைத்துச் சென்ற தேசிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம் செய்த அனைத்தையும், திலகராஜ் மறந்துவிட்டு, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காதமைக்காக வஞ்சக ரீதியாகவும், நன்றி மறந்தும் செயற்படுவதாக தேசிய தொழிலாளர் முன்னணியின் ஆதரவாளர்கள் முகநூலில் பதிவிட்டு வருகின்றனர்.

மலையகத்திற்கான சிறந்த தலைவரும், கட்சியும் பழனி திகாம்பரம் மற்றும் தேசிய தொழிலாளர் முன்னணி என்று மெச்சிவந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் முன்னணியின் பொதுச் செயலாளருமான திலகராஜ், தற்போது அரசபணி கடிதயின் அரச பணி விவகாரத்திற்காக முகநூலில் மெச்சியுள்ளார் என்றும் முகநூல் பதிவுகளைப் பார்க்க முடிகிறது.

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

  • சிவராமன்
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05
Video thumbnail
மலையகம் நேற்று இன்று நாளை I Shortfilm
06:51
Video thumbnail
நிலைமாற்றம் I ShortFilm
07:21

Related Articles

Latest Articles