திடீர் காய்ச்சல்: யாழில் 3 நாட்களில் நால்வர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் திடீர் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று நாள்களில் நால்வர் உயிரிழந்துள்ள நிலையில், பொதுமக்கள் இது தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாட வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட இவர்கள், நோய் திடீரெனத் தீவிரத்தன்மை அடைந்து உயிரிழந்துள்ளனர். இவர்களின் சுவாசத் தொகுதி கடும் பாதிப்படைந்துள்ளமை மருத்துவ அறிக்கைகளில் தெரியவந்துள்ள நிலையில் இவர்களின் உயிரிழப்புக்கு எலிக்காய்ச்சல் அல்லது உண்ணிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது.

பருத்தித்துறையைச் சேர்ந்த 40 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சாதாரண காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். அதேபோன்று வரணியைச் சேர்ந்த 60 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் காய்ச்சல், மூச்சுத் திணறல் அறிகுறிகளுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். அதேவேளை காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் சேர்க்கப்பட்டிருந்தார். நாவற்குழியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

சாதாரண காய்ச்சல் நிலைமையில் இருந்த இவர்களுக்கு திடீர் என நோய் தீவிரத்தன்மை அதிகரித்தை அடுத்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர்.

பருத்தித்துறை மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கு நோய்த் தன்மை சடுதியாக தீவிரமடைந்ததை அடுத்து சிகிச்சை பெற்று வந்த நால்வரும் உயிரிழந்தனர்.

இவர்களின் உயிரிழப்புக்கு எலிக்காய்ச்சல் அல்லது உண்ணிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. அல்லது ஏதேனும் வைரஸ் தொற்றுக் காய்ச்சலாக இருக்கலாம் என்றும் கருதப்படும் நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்கூற்று மாதிரிகள் சட்டமருத்துவ அதிகாரியால் மேலதிக சோதனைகளுக்காகக் கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளன.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தபோது, மூன்று நாள்களுக்குள் ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்புகளை சாதாரண விடயமாகக் கடந்துவிட முடியாது என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடுமையான சுவாசத் தொகுதி பாதிப்புக் காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. கடந்த சில நாள்களாக வடக்கில் கடும் மழை பெய்திருக்கும் நிலையில் எலிக்காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன. ஆனால், இந்த உயிரிழப்புக்களுக்குக் எலிக்காய்ச்சல் காரணம் என்று இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. உண்ணிக்காய்ச்சல் அல்லது ஏதேனும் வைரஸ் காய்ச்சல்கூடக் காரணமாக இருக்கலாம். கொழும்பில் இருந்து ஆய்வறிக்கை வந்த பின்னரே காரணத்தைச் சரியாகக் கூறமுடியும்.

ஆயினும், பொதுமக்கள் இது தொடர்பாக விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியம். பொதுமக்கள் சுகாதாரத்தைச் சரியாகப் பேணிச் செயற்பட வேண்டியது அவசியம். ஆராக்கியமான உணவுப் பழக்கவழக்கம் மற்றும் சுத்தமான குடிதண்ணீர் பாவனை அவசியமானது.

அத்துடன் காய்ச்சல், இருமல் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாககத் தகுதி வாய்ந்த வைத்தியரை நாடி உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles