தியத்தலாவை, ‘பொக்ஸ்ஹிஸ்’ கார் பந்தயத் திடலில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
……
தியத்தலாவை, ‘பொக்ஸ்ஹிஸ்’ கார் பந்தயத் திடலில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் அறுவர் பலியாகியுள்ளனர்.
இவ்விபத்தில் 21 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் வெளிநாட்டு பிரஜையொருவரும் இருப்பதாக தெரியவருகின்றது. 2024 கார் பந்தயத்தின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
போட்டியில் பங்கேற்ற காரொன்று திடலை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.










