திலகர் தலைமையில் மலையகத்தில் புதிய அமைப்பு உதயம்!

அறிவார்ந்த அரசியல் உரையாடலை மலையக அரசியல் தளத்தில் உருவாக்கும் நோக்கில் ‘மலையக அரசியல் அரங்கம்’ எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று அவ்வமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.

குறித்த அமைப்பு கடந்த 30 ஆம் திகதி உதயமானாலும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் தலவாக்கலையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது தெளிவுப்படுத்தப்பட்டது. மலையக அரசியல் அரங்கின் பிரதான அமைப்பாளர், செயற்குழுச் செயலாளர் ஆகியோரும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

” அறிவார்ந்த அரசியல் உரையாடலை மலையக அரசியல் தளத்தில் உருவாக்குதல், அதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுதல், மாவட்ட எல்லைகளைக் கடந்த மலையக அரசியலை முன்னெடுத்தல் ஆகியன அமைப்பின் பிரதான நோக்கமாகும்.” – என்று திலகராஜ் தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு மற்றும் தேர்தல் மறுசீரமைப்பு என்பன தயாரிக்கப்பட்டுவருகின்றன. நாடாளுமன்றத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, சமூகத்தில் அறிவார்ந்த கருத்தாடல்களை உருவாக்கி, சமூகத்தின் தேவை அறிந்து, அவர்களின் தேவைக்கேற்ப தேவையான யோசனைகளை இனிவரும் தேசிய மட்ட விடயங்களின்போது முன்வைப்போம். ஏனெனில் மக்களின் நிலைப்பாடுதான் பிரதிபலிக்க வேண்டும்.

மலையகம் சமூகம் நூற்றாண்டுகால அரசியல் சமூகம், அதற்கு அரசியல் அடையாளம் இருக்கின்றது. கூலி சமூகம் மட்டும் அல்ல. செனட் சபையில்கூட பிரதிநிதித்துவம் இருந்திருக்கின்றது. எனவேதான் அமைப்பின் சின்னமாக நடேசய்யர் மற்றும் அவரின் பாரியாரின் படங்களை பயன்படுத்தியுள்ளோம்.

மலையக அரசியல் அரங்கமானது, அரசியல் கட்சியாகவோ அல்லது தொழிற்சங்கமாகவோ பதிவுசெய்யப்படவில்லை. சமூக அரசியலை முன்னெடுப்பதற்கான அமைப்பு என்பதால் அதில் எவரும் இணையலாம். ” – என்றார் திலகர்.

-க.கிஷாந்தன்-

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles