“ நாட்டில் 220 இலட்சம் மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளுக்குக் குறித்த வரவு செலவுத் திட்டத்தில் தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை. பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. பணவீக்கம் உயர்வடைந்துள்ளதுடன், வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ளது. இவற்றுக்குத் தீர்வுகளை முன்வைக்கும் வகையிலான திட்டங்கள் வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெறவில்லை. வறுமை ஒழிப்பு திட்டமும் இல்லை.
ஐந்து மணிநேரம் ஜனாதிபதி உரையாற்றி இருந்தாலும், தீர்வு இல்லாத பட்ஜட் என்பதே எமது கருத்தாகும்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு- செலவுத் திட்டம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.










