தோட்டத் தொழிலாளர்களுக்கு கடந்த வருடம் வழங்கப்பட்ட நாளொன்றுக்கான 200 ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவை 2027 ஆம் ஆண்டிலும் வழங்குவதற்கான நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மேற்படி கொடுப்பனவு ஒரு வருடத்துக்கு மட்டுமே வழங்கப்படும் என சிலர் கூறினர். ஆனால் 2027 இலும் அந்த கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று நிகழ்த்தப்பட்ட வரவு- செலவுத் திட்ட உரையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
பெருந்தோட்டத்துறை தொடர்பான சில முன்மொழிவுகள் வருமாறு,















