தீவிரமடையும் போர்: அணு ஆயுதங்களை பயன்படுத்த புடின் ஒப்புதல்!

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி 1,000 நாட்கள் நிறைவடைந்​துள்ள நிலை​யில், இந்த போரில் அணு ஆயுதங்​களை பயன்​படுத்துவது தொடர்பான புதிய கொள்​கை​யில் புடின் கையெழுத்​திட்​டுள்​ளார்.
ரஷ்யா – உக்ரைன் இடையில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ரவரி மாதம் போர் தொடங்​கியது. இந்த போர் தொடங்கி நேற்​றோடு 1,000 நாட்கள் நிறைவடைந்​துள்ளது. ரஷ்யா​வின் தாக்​குதலால் உக்ரைனில் ஆயிரக்​கணக்​கானோர் உயிரிழந்​துள்ளனர். நாட்​டின் அடிப்படை உள்கட்​டமைப்பு தகர்ந்​துள்ளது.

இதனிடையே, ரஷ்யா மீது தாக்​குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட மேற்​கத்திய நாடுகள் இராணுவ உதவி வழங்கி வந்தன. நீண்ட தூரம் சென்று இலக்​குகளை துல்​லியமாக தாக்​கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி இருந்​தது. எனினும், இந்த ஏவுகணை​களைப் பயன்​படுத்த கட்டுப்​பாடுகள் விதிக்​கப்​பட்​டிருந்தன.

தற்போது அமெரிக்க ஜனரிபதி ஜோ பைடனின் பதவிக்​காலம் முடிவடைய உள்ளது. இந்நிலை​யில், தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்​கும் ஏவுகணைகளை பயன்​படுத்த உக்ரைனுக்கு பைடன் அனுமதி வழங்​கி​யுள்​ளார். இந்த ஏவுகணைகளை உக்ரைன் பயன்​படுத்​தும்​ பட்​சத்​தில் ரஷ்யா​வுக்கு தீவிர பாதிப்பு ஏற்படும். இந்த சூழலில், உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்​களைப் பயன்​படுத்த ரஷ்யா முடிவு செய்​துள்ளது.
ரஷ்​யா​வின் இந்த தீர்மானம் ​காரண​மாக, ரஷ்யா – உக்​ரைன் ​போர் தீ​விரமடை​யும் சூழல்​ உருவாகி​யுள்​ளது.

அதேவேளை அணு ஆயுத பயன்பாட்டுக்கு ஆஸ்திரேலியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. உக்ரைன்மீது ரஷ்யா தொடுத்துள்ள சட்டவிரோத போர் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும், ஐ.நா. சாசனத்தைமீறி செயற்படும் ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது.

Related Articles

Latest Articles