அஹுங்கல்ல – போகஹபிட்டிய பிரசேத்தில் நேற்றிரவு(08) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத இருவர், துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
54 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், துப்பாக்கிதாரிகளை கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
