” அதிகாரத்தை தாருங்கள் தோட்ட துரைமார்களை அடக்குவேன் என்று வாக்குகளை சேகரித்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் ஓடி ஒளிந்துவிட்டாரா” – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் பா. சிவநேசன்.
இது தொடர்பில் சிவநேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
” மலையகத்தில் இன்று தோட்ட துரைமார்களால் தோட்ட தொழிலாளர்கள், தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்னாள் தலவாக்கலை கட்டுகலை தோட்டத்தில் தோட்ட துரையால் இரண்டு தொழிலாளர்கள் தாக்கபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுகலை தோட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தாமல் வெளி தொழிளாளர்களை அமர்த்தியது சம்பந்தமாக அத்தோட்ட மக்கள் துரையிடம் கேட்ட போதே தொழிளாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் காலத்தில் வீர வசனம் பேசிய ஜீவன் தொண்டமான் தற்போது ஓடி ஒளிந்துள்ளார். ஆளும் கட்சியில் அமைச்சராக இருந்து கொண்டு மக்களின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காமல் அரசாங்கத்திற்கு முட்டு கொடுத்து கொண்டிருப்பது ஏன்?
புதிய அரசாங்கம் ஆட்சி பீடம் ஏரியதில் இருந்து மலையக மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். விலைவாசி உயர்வின் காரணமாக மக்கள் பெரும் கஸ்டத்திற்கு உள்ளானபோது 1000/=ரூபாய் சம்பளத்தையும் தற்போது 500/=ரூபாயாக பெரும் அவல நிலை உள்ளாகியுள்ளது.
நாங்கள் தான் பெற்று கொடுத்தோம் என்று மார்தட்டி கொண்டவர்களும் தலைமறைவாகியுள்ளனர்.

தலவாக்கலை வட்டகொட தோட்டத்தில் மக்களிடம் துரை மார் ஊருக்கு வந்தால் கையை பிடித்து இழுத்ததாக சொல்லிவிட்டு என்னிடம் வாங்கள் என்று சொன்னவர்கள்.
இந்த மக்களிற்கு நியாயம் பெற்று கொடுக்க வராதது ஏன் மக்கள் உங்களின் ஆசை வார்த்தைகளை நம்பி வாக்களித்துவிட்டு இன்று கண்டவனிடம் அடிவாங்கும் நிலைக்கு மக்களை தள்ளிவிட்டு வேடிக்கை பாக்கும் அவலம் உருவாகியுள்ளது வேதனையளிக்கின்றது.” -என்றும் அவர் சிவநேசன் குறிப்பிட்டுள்ளார்.
