துறைமுக ஒப்பந்தம் இரத்து: ஆஸ்திரேலியாமீது சீனா அதிருப்தி!

ஆஸ்திரேலியா, டார்வின் துறைமுகத்தை மீளம்பெறும் அல்பானீஸி அரசின் திட்டத்தை ஆஸ்திரேலியாவுக்கான சீனத் தூதுவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது நெறிமுறைகளை கேள்விக்குட்படுத்தும் செயலாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலோபாய ரீதியில் முக்கியத்துவம்மிக்க வடக்கு ஆஸ்திரேலிய துறைமுகம் 99 வருடங்கள் குத்தகைக்கு சீன நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது மேற்படி துறைமுகம் மீளப்பெறப்படும் என்ற உறுதிமொழியை பிரதான இரு கட்சிகளும் வழங்கி இருந்தன.

ஆஸ்திரேலியாவுக்கான சீனத் தூதுவர் சில நாட்களுக்கு முன்னர் டார்வின் துறைமுகத்துக்கு சென்றிருந்தார். சீன நிறுவன ஊழியர்களை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.

துறைமுகம் இலாபகரமாக இல்லாதபோது குத்தகைக்கு வழங்கிவிட்டு, அதனை இலாபகரமானதாக மாற்றிய பிறகு மீளப்பெற முற்படுவது நெறிமுறையற்ற செயல் என சீனத் தூதுவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய டார்வின் துறைமுகம் எப்போது உரிமை மாறும் என்பது பற்றி லேபர் கட்சி இன்னும் எதையும் அறிவிக்கவில்லை.

Related Articles

Latest Articles