தென்கொரியாவில் விமானம் விபத்துக்குள்ளாகி 179 பேர் உயிரிழந்த நிலையில், விமான போக்குவரத்து அமைப்பின் பாதுகாப்பு தரத்தை முழு வீச்சுல் ஆய்வு செய்யும்படி தற்காலிக ஜனாதிபதி சோய் சாங் மாக் உத்தரவிட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான விமானத்தினை மீட்கும் பணி முழுமையாக நிறைவு பெற்ற பின்னர், இந்த ஆய்வினை தொடங்கும்படி அவர் அறிவுறுத்தியுள்ளார்.
விமானங்களின் தரம், விமான போக்குவரத்து மேலாண்மை, விமான நிலைய ஓடுபாதைகளின் நிலை என அனைத்தையும் உள்ளடக்கி விரிவான ஆய்வுக்கு இடைக்கால ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக, தென் கொரிய விமான விபத்துக்கு பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என விமான போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.
தெதன்கொரிய வரலாற்றில் மிக மோசமான விமான விபத்தாகக் கருதப்படும் இந்த விபத்தையடுத்து 7 நாள்கள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.