தெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு

தெற்காசியாவின் மிக உயரமானதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரம் இன்று முதல் செயற்படவுள்ளது.

தேசிய சர்வதேச முதலீட்டாளர்கள் இதில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதுடன் 22 முதலீட்டாளர்கள் உடன்படிக்கையை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தாமரைக் கோபுரம் தனியார் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இவ் வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை 15 உற்சவங்களை நடத்துவதற்கான ஒப்பந்தம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாமரைக்கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இந்த வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதி நிர்மாணப் பணிகள் முடிவடைந்தது. சீன நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள கடன் நிதியை 2024 ஆம் ஆண்டுக்குள் மீளச் செலுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்று உத்தியோகபூர்வமாக செயற்பாடுகளை ஆரம்பிக்கும் தாமரைக் கோரத்தை பார்வையிடுவதற்கு 500 ரூபா மற்றும் 2,000 ரூபா பிரவேசச் சீட்டுக்களை பெற்று அதனைப் பார்வையிடமுடியும் என்றும் வெளிநாட்டவர் 20 டொலரை கட்டணமாக செலுத்தி அதனைப் பார்வையிட முடியுமென்று அவர் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles