தேசியப்பட்டியல் கோருகிறார் வேடுவத் தலைவர்!

ஆசிவாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் ஆசன ஒதுக்கீடொன்று இடம்பெற வேண்டும் என்று ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அனைத்து இனங்கள் பற்றியும் நாடாளுமன்றத்தில் பேசப்படுகின்றது. ஆனால் எம்மை பற்றி எவரும் கதைப்பதில்லை. தோல்வி அடைந்தவர்கள்கூட தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்திவிடுகின்றனர்.

எனவே, எம்மவர்கள் பற்றி கதைப்பதற்கு எமக்கும் தேசியப்பட்டியல் ஊடாகவேனும் ஒரு வாய்ப்பு கட்டாயம் கிடைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கை எடுத்தால் அது பயன்மிக்கதாக அமையும்.” – என்றார்.

Related Articles

Latest Articles