தேசிய தைப்பொங்கல் விழா ஹட்டனில் இன்று (21.01.2024) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலை, கலாசார நிகழ்வுகள், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், போட்டிகள் என பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்படு, தேசிய தைப்பொங்கல் விழா வெற்றிகரமாக நடைபெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் தென்னிந்திய நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஸ், சம்யுக்தா, மீனாக்சி, ஐஸ்வர்யா டட்டா ஆகியோருக்கும் பங்கேற்று மக்களை மகிழ்வித்தனர்.