” தேசிய மக்கள் சக்தியின் போராட்டம்மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகைக்குண்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் ஒரு கட்சி என்ற அடிப்படையில் கவலை அடைகின்றோம்” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், சந்தர்ப்பவாத மற்றும் அநாகரீகமான அரசியல் பயணத்தை ஜே.வி.பி. கைவிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கட்சியின் பெயரையும், சின்னத்தையும் மாற்றினாலும் ஜே.வி.பியின் எண்ணம் மாறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.










