தேன் வியாபாரிபோல் நடித்து தாலி அறுப்பு – இருவர் சிக்கினர்!

யாழ்ப்பாணத்தில் தேன் விற்பனையில் ஈடுபடுவது போல பாசாங்கு செய்து மூதாட்டியிடம் 7 பவுண் பெறுமதியான தாலியை அறுத்துச் சென்றவர்கள்
கைது செய்யப்பட்டனர்.

வல்வெட்டித்துறை தொண்டைமானாறு பகுதியில் கடந்த டிசெம்பர் மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோண்டாவில் மற்றும் தெல்லிப்பழைப் பகுதிகளைச் சேர்ந்த முறையே 50, 41 வயதானவர்களே கைது செய்யப்பட்டனர்.

காங்கேசன்துறை பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

Related Articles

Latest Articles