ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம் (2026.05.15) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண கல்வி பணிப்பாளரின் பணிப்புரைக்கமையவே இதற்குரிய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, நாளைய தினம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஏனைய விடயங்களுக்காக பாடசாலைகளுக்கு அழைப்பதனையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் மாணவர்களின் பாதுகாப்பு கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.
