தேர்தலில் போட்டியிடும் 3,100 அரச ஊழியர்களுக்கு நடக்கபோவது என்ன?

உள்ளாட்சிசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுமுறையை பெற்றுள்ள அரச ஊழியர்கள் தொடர்பில் அரசு முடிவொன்றை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

” உள்ளாட்சிசபைத் தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கையில் 3 ஆயிரத்து 100 அரச ஊழியர்கள், வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதற்காக அவர்கள் சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுள்ளனர்.

எனினும், தேர்தல் நடக்காது என்ற தொனியில் ஜனாதிபதி நேற்று கருத்து வெளியிட்டுள்ளார். அப்படியானால் அரச ஊழியர்களின் நிலை என்ன? ஒன்று அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும். இல்லையேல் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ” – என்றார்.

Related Articles

Latest Articles