எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து வேலைகளும் நுவரெலியா மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும் நுவரெலியா மாவட்ட செயலாளருமான எம்.பீ.ஆர்.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள இந்த தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 5லட்சத்து 77ஆயிரத்து 717 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 19ஆயிரத்து 741 பேர் அஞ்சல் மூல வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 498 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. வாக்கு எண்ணும் நிலையங்கள் 85 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலைவிட இம்முறை தேர்தலில் வாக்கு எண்ணும் நிலையங்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதற்கு காரணம் இம்முறை வாக்கு என்னும் நிலையங்களில் அனுமதிக்கப்படுகின்ற அதிகாரிகளின் என்னிக்கை குறைவாகவே காணப்படுவதால் வாக்கு என்னும் நிலையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பிரதான வாக்கு என்னும் நிலையங்களாக நுவரெலியா காமினி தேசிய பாடசாலை நுவரெலியா தொழில்நுட்ப கல்லூரி நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி மாவட்ட செயலகம் ஆகிய நான்கு இடங்களிலேயே 85 வாக்கு என்னும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.நுவரெலியா மாவட்டத்தில் 4000 அதிகாரிகள் இந்த தேர்தல் கடமைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளனர்.
அது தவிர 4000 அதிகாரிகள் வாக்களிப்பு நிலையங்களிலும் 2000 பேர் தேர்தல் முடிவுகளை பெற்றுக் கொள்வதற்குமாக மொத்தமாக 10000 பேர் நுவரெலியா மாவட்ட தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும் நுவரெலியா மாவட்ட செயலாளருமான எம்.பீ.ஆர்.புஸ்பகுமார மேலும் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு