” தேர்தல்களை பிற்போடுவதற்கு எமது கட்சி சூழ்ச்சி செய்யவில்லை. எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயார். அதற்கான பலம் எமது கட்சிக்கு உள்ளது.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மொட்டு கட்சி செயலாளர் இவ்வாறு கூறினார்.
” தேர்தலை முன்கூட்டியே நடத்துமாறு போராடியக் கட்சியே எமது கட்சியாகும். தேர்தலை கோரி நீதிமன்றத்தைக்கூட நாடினோம். ஜனநாயகமே எமது கட்சியின் பிரதான நோக்கம். எனவே, தேர்தல்களை பிற்போட உடன்படமாட்டோம். அதனை பிற்போட வேண்டிய தேவையும் எமக்கு கிடையாது. ஏனெனில் வெற்றி என்பது எம் வசமே உள்ளது.” – எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.
