இவ்வருடத்திற்கான தேர்தல் இடாப்பு திருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கிணங்க கிராம சேவை அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் தொடர்பான தரவுகளை திரட்டும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டின் நிலவிய கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலை மற்றும் அரசியல் நெருக்கடி நிலை காரணமாக கடந்த இரண்டு வருடங்களிலும் கிராம சேவை அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்காளர்களின் தகவல்களை திரட்டும் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்றும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இம்முறை கிராம சேவை அதிகாரிகள் வீடு வீடாக சென்று தரவுகளை திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த ஆனைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறு கிராம சேவை அதிகாரிகள்
கம்பளையில் கொலை செய்யப்பட்ட 22 வயதுடைய யுவதியின் ஜனாஸா நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. குறித்த பெண்ணின் சடலம் நேற்று முன்தினம் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து முறைப்படி குறித்த பெண்ணின் ஜனாஸா நேற்று மாலை 3 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலும், யுவதியின் மரணத்திற்கான காரணம், பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்பே அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
