” மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் என எதிரணி உறுப்பினர் மனோ கணேசனே அறிவிப்பு விடுத்துள்ளார்.
தேர்தல் தொடர்பில் அரசாங்கமே தீர்மானிக்கும். எனினும், மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை. தீர்மானமும் எட்டப்படவில்லை.” –
இவ்வாறு வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று தெரிவித்தார்.

வலுசக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.










