உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி எதிரணி உறுப்பினர்கள்
சபைக்குள் போராட்டம் நடத்தியதால், நாடாளுமன்றம் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்தயாப்பா
அபேவர்தன தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கை முடிவடைந்த பின்னர்,
எதிரணி உறுப்பினர்கள் சபைக்கு நடுவே வந்தனர்.
” தேல்தலை உடன் நடத்து, தேர்தலை நடத்த நிதி வழங்கு, எதற்காக அச்சப்படுகின்றாய், ” உட்பட பல வாசகங்கள் எழுதப்பட்ட
பதைதைகளை தாங்கியவாறு கோஷங்களை எழுப்பிவருகின்றனர்.
இதனால் சபைக்குள் குழப்ப நிலை உருவானது.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக சபை நடவடிக்கைகள், நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன.










