தேர்தல் சமரிலிருந்து ஒதுங்குகிறார் தம்மிக்க பெரேரா?

ஜனாதிபதி தேர்தல் சமரில் இருந்து விலகுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா பரிசீலித்துவருகின்றார் என்று உத்தியோகப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனிப்பட்ட காரணமொன்றாலேயே அவர் இவ்வாறு தேர்தல் களத்திலிருந்து பின்வாங்கும் முடிவை எடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா, நாளை காலை பெயரிடப்படவிருந்த நிலையிலேயே இந்த பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது என சிங்கள இணைய ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது.

Related Articles

Latest Articles