தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி, பள்ளக்கட்டுவை நகரில் வேட்பாளரொருவரது காட்சிப் பதாதைகளை காட்சிப்படுத்திக் கொண்டிருந்த நான்கு இளைஞர்களை எல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், அவர்கள் பயணித்த “கெப்” வாகனம் மற்றும் பெருமளவிலான போஸ்டர்கள் ஆகியனவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
பதுளை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரொருவரது காட்சிப் பதாதைகளை, காட்சிப்படுத்திக் கொண்டிருந்த நான்கு இளைஞர்களே, கைது செய்யப்பட்டிருப்பவர்களாவர்.
கைது செய்யப்பட்ட இவ் இளைஞர்களை, பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்றும், எல்ல பொலிசார் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவம் தொடர்பாக 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு செய்யப்பட்ட புகாரையடுத்தே, மேற்படி கைதுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
எம். செல்வராஜா, பதுளை