தேவையேற்படின் மீண்டும் போர்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!

தேவையேற்படின் மீண்டும் போரை தொடங்குவதற்குரிய முழு உரிமையும் எமக்கு உள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழித்து ஒழிப்பதாக கூறி இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது.

இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடுமையான மோதல் தொடர்ந்தது.

இந்த நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் பணிகளில் அமெரிக்கா மற்றும் கத்தார் ஈடுபட்டன. இதற்கமைய போர் நிறுத்தம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விதிமீறல் இருந்தால், அதை இஸ்ரேல் சகித்துக் கொள்ளாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

‘ ஒப்புக்கொண்டபடி விடுவிக்கப்படும் பணயக்கைதிகளின் பட்டியலை பெறும் வரை நாங்கள் கட்டமைப்பை நோக்கி முன்னேற முடியாது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விதிமீறல்களை இஸ்ரேல் பொறுத்துக்கொள்ளாது. . தேவைப்பட்டால் அமெரிக்காவின் ஆதரவோடு போரை மீண்டும் துவங்க எங்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Related Articles

Latest Articles