தொல்பொருள் அழிப்பு குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் தொல்பொருள் அழிப்பு நடவடிக்கை தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதற்கான யோசனை கடிதம் ஜுன் 19 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்படும்.

குருந்தூர் விவகாரை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் ஜனாதிபதியிடம் கூறிய விடயங்கள் அப்பட்டமான பொய்யாகும். எதிர்வரும் 21 ஆம் திகதி பிரிதுரு ஹெல உறுமய குழுவினர் குருந்தூர் விகாரைக்கு கண்காணிப்பு பயணத்தை மேற்கொள்வார்கள். அதன்போது கூட்டமைப்பு எம்.பிக்களின் பொய் அம்பலப்படுத்தப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles