நாட்டில் ஏற்பட்டுள்ள பண வீக்கத்தின் அடிப்படையில், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பின் அவசியம் குறித்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயமான சௌமிய பவனில் , தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையப் பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
கலந்துரையாடலில் இதொகாவின் தலைவர் செந்தில் தொண்டமான், பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆழமாக ஆராயப்பட்டது.










