‘தொழிற்சாலைக்கு பூட்டு’ – நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராக தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

தேயிலை தொழிற்சாலையை மூடுவதற்கு தோட்ட நிர்வாகம் எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெவரலி தோட்ட தொழிலாளர்கள் இன்று முதல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்துக்குட்பட்ட வெவரலி பிரிவில் உள்ள போட்மோர், வெவரலி , ஆடலி, மோனிங்டன் கீழ் பிரிவு, மேல் பிரிவு ஆகிய தோட்டங்களை சேர்ந்த 650 இற்கு மேற்பட்ட தொழிலாளர்களே இவ்வாறு போராட்டத்தில் குதித்தனர்.

அத்துடன், 100 இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு நடவடிக்கையிலும் இறங்கினர்.

இந்நிலையில் இதொகா, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், தோட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் இடம் பெற்றது.

இதன்போது தொழிற்சாலையை உடனடியாக திறக்குமாறு தோட்ட அதிகாரியிடம் தோட்டம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும், தொழிற்சாலையை சீர் செய்து கொடுத்த பின்னரே திறக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொழிற்சாலை மீள திறக்கப்படும்வரை தாம் பறிக்கும் கொழுந்தை நிர்வாகம் முறையாக ஏற்க வேண்டும் எனவும், தொழிற்சாலை விரைவில் திறக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு இல்லையேல் மீண்டும் போராட்டம் இடம்பெறும் எனவும் தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles