பாணந்துறை – நல்லுருவ பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் இரசாயன கசிவு ஏற்பட்டதை அடுத்து, 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அலகுசாதன ஒப்பனை உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில், பொருட்களுக்கான கலவைகளை மேற்கொள்ளும் போதே இந்த இரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தை அடுத்து, தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான பொலிஸ் விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எம்.எப்.எம். அலி