” தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வை முன்வைக்க ஆணைக்குழு”

” மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களும் மனிதர்களே, ஓரிரு வீடுகளை அமைத்துக்கொடுப்பதால் அவர்களின் பிரச்சினை தீரப்போவதில்லை. அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகின்றது. ஆயிரம் ரூபா என்ற அற்ப தொகையை வழங்கிவிட்டு, கம்பனிகள் கோடி கணக்கில் இலாபம் உழைக்கின்றன.
அம்மக்களுக்குரிய கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களும் தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும். ” என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வை முன்வைப்பதற்கு ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும். அம்மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அந்த குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் பேராயர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles