‘ தோட்டத் தொழிலாளர்களுக்கு நில உரிமையை வழங்குக’ – கூட்டமைப்பு வலியுறுத்து

” 200 வருடங்களாக இந்நாட்டுக்கு உழைத்தும் இன்னும் காணி உரிமையற்றவர்களாகவே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்துவருகின்றனர். அவர்களுக்கு ஒரு துண்டு காணியைக்கூட வழங்கமுடியாத நிலையிலேயே காணி அமைச்சு இருக்கின்றது.” -என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” காடாக இருந்த மலைநாட்டை மலையக மக்கள் வளமாக்கினர். இந்நாட்டின் பொருளாதாரத்தை தோளில் சுமந்தனர். 200 வருடங்களாக உழைப்பை வழங்கிவருகின்றனர். ஆனால் அம்மக்களுக்கு இன்னும் காணி உரிமை இல்லை.

தற்போது 7 பேர்ச்சஸ் காணியில் வீடுகள் கட்டப்படுகின்றன. அதுவும் பின்னிலையிலேயே இருக்கின்றது.

ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுகின்றது எனக் கூறப்பட்டாலும் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. எனவே, அவர்கள் தொடர்பில் கூடுதல் கரிசனை செலுத்துங்கள்.”- என்றார்.

Related Articles

Latest Articles