” ஹட்டன் பிரகடனம்மூலம் மலையக மக்களுக்கு எவ்வாறான தீர்வுகள் கூறப்பட்டுள்ளனவோ, அவை நிச்சயம் எமது அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும்.” – என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
‘ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் வரவு, செலவுத் திட்டத்தில் நல்லவொரு அறிவிப்பு வெளியாகும். தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் பற்றியும் கலந்துரையாடிவருகின்றோம்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு கௌரவமாக வாழக்கூடிய சம்பளத்தை பெறக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவோம். போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் நாம், எனவே, அதற்கான தீர்வையும் பெற்றுக்கொடுப்போம்.” – என்றார்.
