தோட்டத் தொழிலாளிமீது அதிகாரிகள் தாக்குதல் – நீதிகோரி மக்கள் போராட்டம்!

தோட்டத் தொழிலாளர்மீது,  தோட்ட அதிகாரிகள் இருவர் தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டித்து லுணுகலை  – ஹொப்டன் , பங்களோ டிவிசன் தொழிலாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லுணுகலை, ஹொப்டன் – பங்களோ பிரிவில் உள்ள தேயிலை தொழிற்சாலை ஆலயத்தில் தொழிலாளர்கள் நேற்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது தோட்டத்தின் இரண்டாம் நிலை அதிகாரியும், தோட்ட உத்தியோகத்தர் ஒருவரும் இணைந்து தொழிலாளி ஒருவர்மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான நபர்,  ஹொப்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்,  மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு – அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் தோட்ட அதிகாரிகளின் செயலை வன்மையாகக் கண்டித்துள்ள தொழிலாளர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தியுமே இன்று போராட்டத்தில் இறங்கினர்.

தொழிலாளியை தாக்கிய இருவரும் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பசறை நிருபர் – ராமு தனராஜா

Related Articles

Latest Articles